காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளதாகவும் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அல் ஜவாஹிரி இன்று நடந்த டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவரது தலைக்கு 25 மில்லியன் டொலர் வெகுமதி வழங்குவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் இன்று அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
அல் ஜவாஹரி கொல்லப்பட்டதை சவுதி வரவேற்றுள்ளது. அல்கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அல் ஜவாஹரி கொல்லப்பட்டதை சவுதி வரவேற்றுள்ளது. அல்கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.