
முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று (08) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கலந்துரையாடலின் பின்னர் அமைச்சருடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மூன்று வாரங்களுக்குள் தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அனுமதி வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, மேல் மாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தொழில்முறை முச்சக்கர வண்டி சாரதிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், அரச மற்றும் தனியார் பஸ்களின் தேவைகளை கண்டறியும் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.
சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் போக்குவரத்து ஆணைக்குழு ஒவ்வொரு பிரிவினருக்கான தேவைகளை இனங்கண்டு எரிசக்தி அமைச்சுக்கு எரிபொருள் அளவுகளை பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது.
அந்தத் தேவைகளைப் பெற்ற பின்னர் அடுத்த வாரத்திற்குள் ஒரு தனி QR குறியீட்டில் கூடுதல் எரிபொருள் ஒதுக்கீட்டை அமைச்சகம் ஒதுக்கும் என்று எரிசக்தி அமைச்சர் கூறினார்.
அதுவரை தனியார் பேருந்துகளுக்குத் தேவையான கூடுதல் எரிபொருளை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 107 இ.போ.ச டிப்போக்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ள https://chat.whatsapp.com/D72lD9wd4kN6FldOsdv6DA