சதொச கிளைகள் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நேற்று (23) முதல் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.
அதன்படி, 485 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பருப்பின் சில்லறை விலையை 460 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசியை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 198 ரூபாவாகவும் விற்பனை செய்ய சதொச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சதொச உயர் கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரிசி மற்றும் பருப்பு விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல உணவுப் பொருட்கள் இருப்பதாகவும் சதொச ஊழியர்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)