சமூக ஊடக செயற்பாட்டாளர் பத்தும் கெர்னருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பத்தும் கெர்னர் இன்று முன்னதாக அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கின் சாட்சியாக இருக்கும் இராணுவ சிப்பாய் ஒருவரால் அவர் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வியாழக்கிழமை (28) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்ததையடுத்து பத்தும் கெர்னர் கைது செய்யப்பட்டார்.
பத்தும் கெர்னரின் கைது, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில், கட்டுக்கடங்காத சம்பவங்கள் இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையது என பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)