
குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணத்தில் இருந்து நிவாரணம் வழங்குவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு திறைசேரியிடம் 65 மில்லியன் ரூபா கோரியதாகவும், அதற்கான தொகை இதுவரை கிடைக்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
மின் கட்டணம் 50 முதல் 75 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள விலைவாசி உயர்வு திகதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)