நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு கிலோ அரிசியும் இன்று (16) முதல் 5 ரூபாவினால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அரிசியின் விலையை மேலும் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அரிசி சந்தைப்படுத்தல் சபை நாளை (17ம் திகதி) முதல் நெல்லை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், நாட்டு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 125 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சந்தையில் ஒரு கிலோ நெல்லின் விலை 90 ரூபாவிற்கு மேல் குறைந்துள்ளதாக விவசாயிகள் முறையிடுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு நெல் சந்தைப்படுத்தல் சபை தலையிட்டு விவசாயிகளின் அரிசி உற்பத்திகளுக்கு அதிகூடிய விலையை பெற்றுக்கொடுக்கும் எனவும் அமைச்சர் கூறினார். மற்றும் முதற்கட்டமாக 2000 மில்லியன் ரூபா செலவில் 30,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
அரிசி உற்பத்தியாளர்கள் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)