கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் போதைப்பொருள் சம்பந்தமான வழக்கு ஒன்றின் போது சாட்சியமளிக்கும் சாட்சியை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் குறிவைத்துள்ளார்.
குறி தவறிய நிலையில், சந்தேகநபர் நீதிமன்றில் மக்களை அச்சுறுத்தியதுடன், மீண்டும் ஒருமுறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
உயிர்ச்சேதம் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகநபரை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)