![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxONXERfZ7-5eR2tvS-v2p85Ha2FnkgOQ8_zEIg3O6txAChPbsm6nhkyZVK0_DFlEXdKfetN--HLyp2OsCLEijWCn4xz61MPIPSzcDiNKcAAyj3a1Qk1yEfeOEgw2c5AwqkGNuA1wGZWpFdHNR0czQ3UGQpN9y4AP72x4Tgp_0xuctOAn7PQkNqXkO/s16000/34.jpg)
கம்பஹா - ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன 2021 உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு - புனித மைக்கேல் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்வண்ணன் துவரகேஷ் உயிரியல் அறிவியலில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
நாரம்மல - மயூரபாத சென்ட்ரல் கல்லூரியைச் சேர்ந்த நெரந்த தில்ஹார குமாரசிங்க, பொறியியல் தொழில்நுட்பப் பாடப் பிரிவில் நாடளாவிய ரீதியில் பட்டியலில் முதலாமிடம் பிடித்துள்ளார்.
பதுளை - கெந்தகொல்ல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இஷார லக்மால் ஹீன்கெந்த கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பு 07 - றோயல் கல்லூரியைச் சேர்ந்த சஹான் சமரகோன் 2021 உயர்தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். (யாழ் நியூஸ்)
குறிப்பு: இது உங்கள் எதிர்கால வெற்றியை தீர்மானிக்கும் பரீட்சை அல்ல!