யாழ்ப்பாணம் மாதகல், சவுக்கடி கடற்கரைப் பகுதியில இன்று (19) சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான 93 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மாதகல், சவுக்கடி கடற்கரை பகுதியில், வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான, இலங்கை கடற்படை கப்பலான “அக்போ” மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சவுக்கடி கடற்கரையில் உள்ள பெட்டியை ஆய்வு செய்த போது, 40 பொதிகள் அடைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படை நடவடிக்கைகளால் கஞ்சா கையிருப்பை மாலுமிகளால் கரைக்கு கொண்டு வர முடியவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)