முச்சக்கர வண்டி சங்கங்கள் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
முதல் கிலோமீட்டர் கட்டணம் ரூ.120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். மேலும் 2வது கிலோமீட்டரில் இருந்து 100 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வர்த்தகத்தை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலையிட்டு பொதுப் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
டாக்சி சேவையாக இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் மீற்றர்களுடன் கூடிய முச்சக்கர வண்டிகள் தாம் விரும்பியவாறு கட்டணத்தை அதிகரித்து தற்போது கிலோமீட்டர் ஒன்றிற்கு ரூ. 250 அறவிடுவதாக தெரிவித்தார்.
கட்டணத்தை ரூ. 100 இலிருந்து திருத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரூ. 100 முதல் கிலோமீட்டருக்கும் 2வது கிலோமீட்டருக்கு 90 ரூபாவாக இருந்த போது, குறிப்பிட்ட நிறுவனங்களின் மீற்றர் கொண்ட முச்சக்கர வண்டிகள் ரூ. 120 முதல் கிலோமீட்டருக்கும் ரூ. 100 2வது கிலோமீட்டருக்கும் அறவிட்டது.
முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் பொதுமக்கள் தமது பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் கிலோமீற்றர் கட்டணத்தை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு முறையான வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மீற்றர் இல்லாத அனைத்து முச்சக்கர வண்டிகளையும் பதிவு செய்து அவற்றின் செயற்பாட்டிற்கான முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சங்கம் உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)