அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் உரிமத் தகடுகளைத் திருடிச் செல்வதாக இலங்கை பொலிஸார் இன்று அம்பலப்படுத்தியுள்ளனர்.
காலி, காலி துறைமுகம், திஸ்ஸமஹாராமய, அஹுங்கல்ல மற்றும் கதிர்காமம் ஆகிய பொலிஸ் அதிகார எல்லைகளில் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடு திருடப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர்கள் வந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் போலியானவை எனவும் அவை மோட்டார் சைக்கிள்களில் இருந்து திருடப்பட்டது எனவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். (யாழ் நியூஸ்)