எதிர்வரும் 08ஆம் திகதி நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று சுமார் 200 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படும் என முன்னதாக அதன் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்திருந்தார்.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவுடன் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.