அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
The Economist க்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி, தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகியவை தனியார்மயமாக்கப்படலாம் என்று கூறினார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கை முதலீடுகளைத் திறக்கும் என்று கூறிய அவர், எவ்வாறாயினும், சில சலுகைகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதால், அனைத்து சலுகைகளை வைத்திருப்பவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றார்.
சில அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் தொழிற்சங்கங்கள் விரோதப் போக்கை கடைப்பிடிப்பது குறித்து வினவியபோது, "சங்கங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை, மக்கள்தான் முக்கியம்" என்று ஜனாதிபதி கூறினார்.
மக்கள் நினைத்தால் அந்த முடிவை ஏற்றுக் கொள்வார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடல்சார் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் சட்டங்களும் திருத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த அம்சத்தில் இலங்கை அயர்லாந்தை முன்மாதிரியாகக் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)