2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 42,519 இற்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 1919 என்ற இலக்கத்தின் மூலம் 24 மணி நேர அரசாங்க தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம். (யாழ் நியூஸ்)