ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு புதிய அதிகாரிகள் சபையை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இந்த புதிய நிர்வாக சபையை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது கட்சியின் தலைவராக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை அப்பதவியில் இருந்து நீக்கி, அந்த பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பின் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
திரு பசில் ராஜபக்ஷ எந்த பதவியையும் ஏற்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)