
இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள தாய்மார்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான பெண்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவை பெற்றுக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காது என்றும் அந்த பணியகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் போது தாய்மார்கள், தங்களுக்கு பிள்ளைகள் இருக்கின்றனர் அல்லது இல்லை என்பதையும் அல்லது இரண்டு வயதுக்கு மேற்பட்ட, 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் உள்ள தாய்மார்கள், அந்த பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் சத்தியக்கடதாசி வழங்க வேண்டும்.
அந்த சத்தியக்கடதாசியானது, தமது பிரிவுக்கான கிராம உத்தியோகத்தர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.