இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்திய முக்கிய நபர் முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அப்போதைய அமைச்சர் உதய கம்மன்பில கூறியதால், மக்கள் அதிகளவில் எரிபொருளை குவிக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆனால் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க தற்போதைய பொறுப்பு அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.
நாட்டில் வளங்கள் இல்லாத வேளையில் வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு திரு.காஞ்சன விஜேசேகர எடுத்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)