புதிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பம்!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரதம் இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மலையகத்தில் உள்ள பல சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய பாதையில் பயணிக்கும் புகையிரதத்தை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை ரயில்வே திணைக்களம் பூர்த்தி செய்துள்ளது.

‘எல்ல ஒடிஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் கொழும்பு-கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு பதுளை நிலையத்தை சென்றடையும்.

கம்பஹா, வேயங்கொட, பொல்கஹவல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை, எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் சொகுசு ரயில் நிறுத்தப்படும்.

இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளை ரயில் நிலையத்தில் இருந்து காலை 09.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.20 மணிக்கு கொழும்பு  ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் பாதையில் இருக்கும் இயற்கை காட்சிகளில் நிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.