
இலங்கை மின்சாரசபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினமும் (22) 3 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய A முதல் W ஆகிய 20 வலயங்களில் பிற்பகல் 1.00 மணிமுதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 40 நிமிடங்களும் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
