சுங்க அதிகாரிகளாக காட்டிக்கொண்டு இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
47 வயதான நதிஷா ரோஷினி, கடந்த திங்கட்கிழமை இலங்கையில் இருந்து விமானத்தில் வந்ததாக சென்னை பொலிசார் தெரிவித்தனர்.
இலங்கையைச் சேர்ந்த முகமது நஜ்மின் (31) மற்றும் செல்லையா அரவிந்தன் (40), என அடையாளம் காணப்பட்ட இரு குற்றவாளிகள், குறித்த நபரை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தினர்.
அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்தார். பின்னர், பொலிஸ் இலும் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். (யாழ் நியூஸ்)