பிஸ்கட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை பிஸ்கட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிஸ்கட் உற்பத்திக்குத் தேவையான கோதுமை மாவின் விலை ஏறக்குறைய முன்னூறு வீதம் அதிகரித்துள்ளதால் பிஸ்கட் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், இலங்கையில் பிஸ்கட் பொருட்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் இருப்பதாகவும், அதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.பி.சூரிய குமார தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழிலை அழிக்க திட்டமிட்ட சதி நடப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)