குளிரூட்டப்பட்ட லொறியில் சிலாபத்தில் இருந்து கல்பிட்டிக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 1429 லீற்றர் பெற்றோல் இன்று (18) அதிகாலை தலுவ பகுதியில் வைத்து நுரைச்சோலை பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நுரைச்சோலை பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து அமுல்படுத்திய உடனடி வீதித்தடையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 மற்றும் 29 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் சிலாபம் முகுனவடவன மற்றும் ரிதீ வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சில காலமாக எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)