
அகில இலங்கை YMMA பேரவையின் ஏற்பாட்டில், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொள்ளவுள்ளார்.
வரவேற்புரை, நூல் அறிமுகம்: இர்பான் இக்பால் (சோனகர்.கொம் ஆசிரியர்)
ஆசியுரை : ரி. செந்தில்வேலவர் (பிரதம ஆசிரியர் - தினகரன்)
வாழ்த்துரைகள் :
1. மாத்தளை எம். எம். பீர் முஹம்மது (தலைவர் - மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவை)
2. ரவூப் ஹக்கீம் ( தேசிய தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
3. ரிஷாட் பதியுதீன் (தேசிய தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)
4. என். எம். அமீன் (முன்னாள் தலைவர் - முஸ்லிம் மீடியா போரம்)
நூல் கருத்துரை :
1. ஏ. எம் நஹியா (முன்னாள் பணிப்பாளர் நாயகம் - புனர்வாழ்வு மீனவர், வீடமைப்பு மீனவர் நலன்)
2. கவிஞர் ரா. நித்தியானந்தன் (முன்ளாள் விரிவுரையாளர் - அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்)
நூலாசிரியர் உரை: இக்பால் அலி
ஏற்புரை: சஹீட் எம். ரிஸ்மி (தேசியத் தலைவர் - அகில இலங்கை YMMA பேரவை)
நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் நாட்டின் உயர்ச்சிக்காகவும் மக்களின் மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் மக்கள் நலன் பேணும் துறை சார்ந்த இளம் தலைமைத்துவங்களையும் ஊடகத் துறை சார்ந்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் உள்ளடங்கும்.
எனவே உங்களின் பெறுமதியான கால நேரத்தை ஒதுக்கி இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மிக அன்புடன் வேண்டுகின்றோம்.
-ஏற்பாட்டுக் குழு
மூலம்- தினகரன்