முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடை மற்றும் பர்தா அணிந்து கொண்ட இளைஞர் ஒருவர், காலி ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (18) காலை பதிவாகியுள்ளது.
காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை ரயில் நிலையத்துக்குச் சென்ற அவர் கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை பெற்றுக் கொள்ளும்போது அவரின் குரலில் சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர்.
பின்னர் ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின்போது தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பிருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காலி ரயில் நிலையத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
தனத காதலியும் அவருடன் தொடர்பை பேணும் இளைஞரும் காலி ரயில் நிலையத்துக்கு வருவதாக தனக்கு கிடைத்த தகவலின் அப்படையிலேயே அதனைக் கண்டுபிடிப்பதற்காக இவ்வாறு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் அணிந்துள்ள இந்த ஆடைகள் தனது தாயாரின் ஆடை எனவும் அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
-metro