ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அறிக்கையில்,
'ஒரு தொலைபேசி அழைப்பில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதில் இலங்கையை ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்தை நோக்கி அழைத்துச் செல்வதில் வெற்றிபெற வாழ்த்தினார்.
மேலும் இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர்.' என குறிப்பிடப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)