காலி பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் பலரை சமூக ஊடகங்கள் ஊடாக ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
காலியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பல சிறுவர்களை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், பிரபல கோவிலை நடத்தி வரும் அர்ச்சகர் என்ற போர்வையில் வாட்ஸ்அப் மூலம் குழந்தைகளை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.
உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)