
மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (20) இராஜகிரிய பண்டாரநாயக்கபுரவில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேகநபரின் வீட்டில் 200 ஆண்டுகளுக்கும் மேலான பித்தளை சுவர் அலங்காரங்கள், கமரா உபகரணங்கள் மற்றும் கமரா பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மற்றுமொரு குழுவினருடன் அலரி மாளிகைக்குள் பிரவேசித்து ஊடகப்பிரிவின் சொத்துக்கள் மற்றும் அலரி மாளிகையிம் சுவர் அலங்காரப் பொருட்களை திருடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.(யாழ் நியூஸ்)