காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக செயற்பட்ட தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய குற்றத்திற்காகவே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு) பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
சட்டவிரோதமான முறையில் தேசிய தொலைக்காட்சிக்குள் பிரவேசித்து அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கடந்த ஜுலை மாதம் 27 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)