பல சர்வதேச தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுவதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
பேரவையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஜே. தந்தை இம்மானுவேல் டுவிட்டர் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான அச்சம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த தடை நீக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாக அவர் அந்த செய்திகளில் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தும் அவர், இன, மத வேறுபாடுகள் தொடர்பில் இலங்கையர்களின் மனப்பான்மை மாற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு காணும் நோக்கில் இலங்கை அரசாங்கம் இந்த தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புலம்பெயர் தமிழ் குழுக்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈர்த்து வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க முடியும் என்பது ஜனாதிபதியின் கருத்து என அந்த ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)