நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக பல சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெறும் மருந்துகள் தொடர்பில் அனைத்து வைத்தியசாலைகளிலும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் திரு.ஹரித அலுத்கே குறிப்பிடுகின்றார்.
பொது மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள், சத்திரசிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்துகள், வெளிநோயாளர் பிரிவுகளின் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமையை விரைவில் சரி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சுகாதார அமைப்பும் நாடும் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)