இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இலங்கை மற்றும் இந்திய தபால் துறைகள் இணைந்து தலா இரண்டு நினைவு முத்திரைகளை வெளியிட முடிவு செய்துள்ளன.
இதற்காக இரு நாடுகளின் தபால் திணைக்களங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
“ஜனநாயகம்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இரு நாட்டு நாடாளுமன்றங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இரு நாடுகளாலும் உருவாக்கப்பட்ட இந்த முத்திரைகளிலிருந்து தலா 3,000 முத்திரைகள், 5,000 நினைவுப் பரிசுத் தாள்கள் மற்றும் தலா 2,000 முதல் நாள் அட்டைகள் பரிமாறிக் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)