மின் கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் புகைப்பட நகல் மற்றும் பிரிண்ட் அவுட் என்பன 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின் துண்டிப்பு காரணத்தால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவிக்கின்றார்.
தமது வேலையைச் செய்வதற்கு மிகவும் பொருத்தமான நேரத்தில் மின்வெட்டும் செய்யப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, மற்ற செலவுகள் அதிகரிப்பு ஆகியவை விலை திருத்தத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த விலை உயர்வால், புகைப்பட நகல் மற்றும் பிரிண்ட் அவுட் கட்டணம் ஒவ்வொன்றும் 10-15 ரூபாய் வரை இருக்கும் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)