பொகுந்தர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சட்டவிரோத மோட்டார் சைக்கிள் போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போட்டியின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பொகுந்தர ஐ.சி.சி வீதியில் நேற்று மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
உயிரிழந்தவர் பிலியந்தலை, பெல்வத்தை, கோரக்கபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)