பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் பணத்தை திருட முயற்சித்த 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ள போதிலும், கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயன்றுள்ளார்.
சம்பவத்தையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலின் விளைவாக, 33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டன.
சந்தேகநபரான சிறுவன் இதற்கு முன்னர் பல தடவைகள் கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)