![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3pKDVcOGGJY1v8GEJ4up4hesKXQDjJHc--t-gtkkAOfnF1vNLRs1QveLP-i16uwT2Lrp1EblKByUIIDTqCpW2g_j26_MnfzuyYkAMO3Oq2vVQ5cPvpr0fFIDwaHSMAFmIcSSKdFwSuKL2L9nf3Xk1riguf1-KJEfABYYgKjcFo19dCMwpvGHeWf5E-Q/s16000/F7A9C439-422F-4569-9846-DC5E2E1DA60E.jpeg)
ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இன்று பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போதிலும், பிரதமருக்கு எதிராக தங்கள் அதிருப்தியை தெரிவிக்க ஏராளமான போராட்டக்காரர்கள் கூடினர்.
பல போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தின் பின்புற வாசல் வழியாகவும் பக்கவாட்டு சுவர்கள் வழியாகவும் நுழைந்தனர்.
பிரதமர் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்தில் 24 போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (யாழ் நியூஸ்)
Protesters have taken over the Prime Minister's office in Colombo
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 13, 2022
📸 @Skandha92 pic.twitter.com/wdgagxC80P