ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, டலஸ் அழகப்பெரும முன்னிலைப்படுத்தப்பட்டு வாக்களிக்கப்பட்ட போதிலும் அவர் தோல்வியடைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவிடம் காலி முகத்திடல் போராட்டம் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், போராட்டம் இப்போது முடிவுக்கு வரவேண்டும் என்று தான் நம்புவதாகவும், போராடும் இளைஞர்கள் வெளியே சென்று பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார். (யாழ் நியூஸ்)