
அதன்படி, ஜூலை 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை QR அமைப்பின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படாது.
தற்போது கொழும்பில் பரீட்சார்த்த முறை இடம்பெறுவதால் தேசிய எரிபொருள் பாஸ் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட QR குறியீடு ஜூலை 25 ஆம் திகதிக்கு பிறகு மட்டுமே செயல்படும்.
செவ்வாய் மற்றும் சனி: 0,1,2
வியாழன் மற்றும் ஞாயிறு: 3,4,5
திங்கள், புதன் மற்றும் வெள்ளி: 6,7,8,9
வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகள்:
இரு சக்கர வண்டிகள்: ரூ. 1500
முச்சக்கர வண்டிகள் : ரூ. 2000
ஏனைய வாகனங்கள் : ரூ. 7000
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடுத்த வாரம் QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த முடியும் என நம்புகிறது, அதுவரை இலக்கத் தகடு முறையின் கீழ் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.