
நுகர்வோர் சேவை அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவிக்கையில், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை தொடர்ந்து பில்லியன் கணக்கான தரவு மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த அமைப்பிற்காக சேகரிக்கப்பட்ட தரவுகளை அனுமதியின்றி மூன்றாம் தரப்பினர் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான தரவுகளை தனியார் நிறுவனங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்த முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எரிபொருள் மோசடி நிறுத்தப்படும் நிலையில், இதன் ஊடாக இன்னும் அதிகமான மோசடிகள் ஆரம்பிக்கும் முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இணைய சேனலில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)