இதற்கு தேவையான கையடக்கத் தொலைபேசிகள் தங்களிடம் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ கூறுகிறார்.
தேவையான வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் தற்போது சந்தையில் கிடைப்பதில்லை எனவும், கொழும்பு நகரிலும் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்த அவர், புறநகர் பகுதிகளில் இவற்றை காணக்கூட முடியாது எனவும் தெரிவித்தார்.
எனவே அந்த வசதிகளுடன் கூடிய கையடக்க தொலைபேசிகளை வழங்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். (யாழ் நியூஸ்)