துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கி, திரும்பிச் செல்ல தயாராகி கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான ஏ330-300 ஏர்பஸ் ரக சரக்கு விமானம், துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கடந்த 3 ஆம் திகதி இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தில் ஏற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட கொள்கலனை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிலைய அதிகாரிகள் சரியான தடுப்பு (பிரேக்கிங்) இன்றி விமானத்திற்கு அருகில் நிறுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் இந்த விமானத்தின் வலது பக்க #2 எஞ்சின் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)