
தலா 30,000 மெட்ரிக் டொன் எடை கொண்ட மூன்று கப்பல்களில் முதலாவது கப்பல் ஜூலை 13-15 இற்குள் இலங்கையை வந்தடையும் என்றும், இரண்டாவது கப்பல் ஜூலை 29-31 இற்குள் இலங்கையை வந்தடையும் என்றும், மூன்றாவது கப்பல் ஆகஸ்ட் 15 ஆம் திகதி இலங்கைக்கு வரும் என்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.
சிபெட்கோ தனியார் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குவதை நிறுத்தியுள்ள போதிலும், லங்கா ஐஓசி இன்னும் கட்டுப்பாடுகளுடன் எரிபொருளை வழங்கி வருகிறது. (யாழ் நியூஸ்)