இலங்கையில் 08 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகளும், டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவாக 82 வாக்குகளும், அநுரகுமார திசாநாயக்கவிற்கு ஆதரவாக 3 வாக்குகளும் பதிவாகின.
இன்று 223 வாக்குகள் பதிவாகின. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிக்கவில்லை. 4 வாக்குகள் செல்லுபடியற்றவை.
இதனடிப்படையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகினார்.