சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பதவி விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதை அடுத்து சபாநாயகர் இன்று மாலை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ள போதிலும், ஜனாதிபதியின் இருப்பிடம் தெரியவில்லை.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகக் கோரி பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தனது தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)