
இந்த உரிமத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதோடு வாகன இலக்கத்தகட்டின் கடைசி இரண்டு இலக்கங்களின்படி, வாரத்தில் இரண்டு நாட்கள் எரிபொருள் வழங்கப்பட உள்ளது.
தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதிப்பத்திர இலக்கமெ, வாகனத்தின் செஸி எண் மற்றும் விபரங்களை சரிபார்க்கப்பட்டு QR குறியீட்டுடன் இந்த எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)