சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்கான பணியாளர் உடன்படிக்கையை விரைவில் எட்ட முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க CNN அலைவரிசையுடன் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியம் தெளிவான வேலைத்திட்டத்தையும் தெளிவான பாதையையும் கொண்டுள்ளது என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை பின்பற்றினால் 04 அல்லது 05 மாதங்களுக்குள் தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)