அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜுலை 9ஆம் திகதி ஏற்றுக்கொண்டவாறு செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதன்படி, உடனடியாக புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் உடன்படிக்கைக்கு அமைய புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை ஒத்திவைப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மேலும் குழப்பமானதாக மாறக்கூடும் என்றும், அதன்பின் இலங்கை "சட்டமற்ற மற்றும் அராஜக நாடாக" மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)