நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை உணர்ந்த, நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்த, சர்வதேச உறவுகளைக் கொண்ட, அரசியல் நோக்கங்கள் அற்ற இவ்வாறான ஐந்து சிவில் செயற்பாட்டாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், சிவில் சமூக அமைப்புகளுடன் ஏற்கனவே இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தேரர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் குறித்த அந்த நபர்களின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது, இது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும், சரியான நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
"எதிர்கால ஜனாதிபதியை அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுவான உடன்படிக்கையுடன் தேசிய தேவைகளின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும். அரசியல் அதிகார மோதலை விட்டுவிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒருமித்த கருத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு செய்ய முடியாவிட்டால் நாங்கள் தயாராக இருக்கிறோம். பதவிக்கு பொருத்தமான ஐந்து சிவில் செயற்பாட்டாளர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறான நிலையில், ஐந்து எம்.பி.க்களுக்குப் பதிலாக அவர்களை தேசியப் பட்டியல் மூலம் நியமிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார். (யாழ் நியூஸ்)