மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் 2022 ஜூலை 04 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிவிப்பை வெளியிட்டு திணைக்களம் மேலும் தெரிவிக்கையில், குறிப்பிட்ட பிராந்திய அலுவலகங்களில் ஏற்கனவே திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துள்ள 100 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஆரம்பத்தில் இடமளிக்கப்படும்.
www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தில் ஏற்கனவே பிராந்திய அலுவலகங்களில் சாதாரண சேவைக்காகப் பதிவு செய்தவர்களுக்கு இந்தச் சேவை வழங்கப்படும் என திணைக்களம் மீண்டும் வலியுறுத்துகிறது மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் வருகை தரவேண்டாம் என கோரியுள்ளது.
தலைமை அலுவலகத்தில் ஒரு நாள் சேவைக்காக ஏற்கனவே பதிவு செய்துள்ள வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் முன்னுரிமை பெற ஆவண ஆதாரங்களுடன் 0706311711 என்ற எண்ணுக்கு WhatsApp (வாட்சப்) தகவல் அனுப்புமாறு அறிவிப்பு மேலும் கேட்டுக்கொள்கிறது. (யாழ் நியூஸ்)