சபாநாயகருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (12) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், 25 பேர் கொண்ட செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அவர்களின் முன்மொழிவுகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படும்.
நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.