தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இன்று (14) தமது சட்டத்தரணிகள் ஊடாக உறுதியளித்துள்ளனர்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.